• Sat. Apr 20th, 2024

அழகர் மலை அழகா,கீழடி சிலை அழகா?’ – அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்

ByA.Tamilselvan

May 2, 2022

கீழடியில் கிடைத்த சுடும் சிற்பத்தின் அழகை விவரிக்கும் விதமாக “அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் தொன்மையையும், சிறப்பையும்வெளிப்படுத்தும் இடமாக கீழடி திகழ்கிறது. வைகை நிதி நாகரீகம் என அழைக்கப்படும் அளவுக்கு உலக நாகரீகங்களுக்கு இணையாக தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் இடமாக கீழடி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு 3 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.அதன் பிறகு மத்திய அரசு ஆகழ்வாய் பணிகளுக்கு நிதி ஒதுக்க மறுத்தது.
இதனைத் தொடந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 4 ஆம் கட்ட அகழாய்வு முதல் 7வது கட்ட அகழ்வாய்வுகளில் இது வரை 18,000-க்கும் அதிகமான பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழர்கள் வரலாறு மிகவும் தொன்மையானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கீழடியில் தொடர்ந்து அகழாய்வுப் பணி நடத்தத் தொல்லியல் துறை நடைவடிக்கை மேற்கொண்டுள்ளது.மேலும் இங்கு கிடைத்துள்ள பொருட்களைகொண்டுஒரு அருங்காட்சியகமும் கீழடி அருகே அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது கிடைத்துள்ள அழகி சிற்பம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள டூவிட்டர் தகவல்
— Thangam Thenarasu (@TThenarasu) May 2, 2022
இந்த நிலையில் கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்நிலையில் இந்த அகழ்வாய்வுப் பணியின் போது சுடுமணல் சிற்பம் கிடைத்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு”மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன? அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” என்று பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *