• Sat. Apr 20th, 2024

தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான யுத்தம் புலிபட தயாரிப்பாளர் செல்வக்குமார் ஆவேசம்

தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 30 அன்று சென்னையில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய தலைவர் முரளி ராமசாமி தலைமையில் ஓர் அணியும், தற்போதைய செயலாளர் மன்னன் தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுகின்றன. மன்னன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் உரிமை காக்கும் அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை வடபழநியில் உள்ள கீரீன்பார்க் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.

மூத்த தயாரிப்பாளர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் ஹென்றி, நடிகை தேவயானி, மற்றும் 400க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் சிறுபட தயாரிப்பாளர்களின் உரிமை காக்க வேண்டும் என்றால் இந்த தேர்தலில் மன்னன் தலைமையிலான அணி வெற்றிபெற வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் சங்கத்தை கைப்பற்ற பணத்தை வாரி இறைக்கின்றனர். இந்தப்போக்கு தடுக்கப்பட வேண்டும் என்றார். கடந்த தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு சில வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த P.T.செல்வகுமார் நடைபெறவுள்ள தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.
எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அலுவலக உதவியாளர், புகழ்பெற்ற சினிமா பத்திரிகையான ஜெமினி சினிமா செய்தியாளர், ஆசிரியர், வெளியீட்டாளர், இளைய தளபதி விஜய் பத்திரிகை தொடர்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், என பன்முக தன்மை கொண்ட P.T.செல்வகுமார் கலப்பை மக்கள் இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் பல்வேறு மக்கள் நல திட்டங்களையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அவர் பேசுகிற போது நடைபெற இருக்கின்ற தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் அதர்மத்துக்கும் – தர்மத்துக்குமான தேர்தல் என்றார். மேலும் பேசுகிறபோது தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பவர்கள், எந்த நேரத்திலும் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்காக வரக்கூடியவர்கள் சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சிறுபட தயாரிப்பாளர்களை நிர்மூலமாக்கும் முயற்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கு தொடங்கியிருக்கின்றன. எதிர் அணியில் போட்டியிடும் வேட்பாளர்களை விலைபேசி வாபஸ் வாங்க செய்யக்கூடிய குறுக்குவழியை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையாள்வது வெட்ககேடானது. வாக்காளர்களையும் இவர்கள் விலைபேசுவார்கள். நமது உரிமை காக்கப்பட வேண்டும். அதற்கு இந்த அணி முழுமையாக வெற்றிபெற வேண்டும் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *