மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரது கணவர் இந்திய இரயில்வேயில் பணியாற்றியதுடன், உசிலம்பட்டி பாரத ஸ்டேட் வங்கியில் ஊதிய கணக்கு வைத்திருந்தாக கூறப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியில் ஊதிய கணக்கு வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விபத்து காப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் சூழலில், கடந்த மாதம் முத்துலட்சுமியின் கணவர் விபத்தில் உயிரிழந்தது குறித்து அறிந்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் மகேஸ்வரி, தனது முயற்சியில் விபத்து காப்பீட்டு தொகையான 1 கோடிக்கான காசோலையை பாதிக்கப்பட்ட முத்துலட்சுமியிடம் இன்று பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் மகேஸ்வரி தலைமையிலான வங்கி ஊழியர்கள் வழங்கினர்.
மேலும் பாரத ஸ்டேட் வங்கியில் அரசு ஊழியர்கள் ஊதிய கணக்கு வைத்திருந்தால் 1 கோடிக்கான விபத்து காப்பீடும், தனிநபர்களும் வருடத்திற்கே 2 ஆயிரம் மட்டுமே செலுத்தினால் விபத்து காப்பீடாக சுமார் 40 லட்சம் விபத்து காப்பீடு தொகையை வங்கி நிர்வாகமே எந்த செலவும் இன்றி பெற்று தரும் என மேலாளர் தெரிவித்தார்.

கிராமப்புற பகுதியான உசிலம்பட்டி பகுதியில் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, கிராமப்புற பொதுமக்களும் ஆண்டுக்கு 2 ஆயிரம் மட்டுமே செலுத்தினால் விபத்து காப்பீடாக 40 லட்சம் பெற்று தரப்படும் என உள்ள திட்டங்களை விளக்கியதோடு, இன்று 1 கோடிக்கான விபத்து காப்பீட்டை பெற்று கொடுத்த வங்கி நிர்வாகத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.