சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர், அலுவலர்களுக்கு 2% சதவீத அகவிலைப்படி உயர்த்தியதற்கும், திருமண முன் தொகை, வீடு கட்டுவதற்கு முன் தொகை உள்ளிட்ட பல்வேறு முன்பண தொகையை உயர்த்தியதற்கு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர், இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர், ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளிட்டோருக்கு இரண்டு சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வர் . மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி தெரிவித்ததுடன், அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு திருமண முன் தொகை மற்றும் வீடு கட்டுவதற்கான முன்பணம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கு முன் பணத் தொகையை உயர்த்தியமைக்கும் , தமிழக முதல்வருக்கு திருமங்கலம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் மிக்க நன்றி கடந்த வணக்கத்தை தெரிவித்தனர்.