• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடிகை மீனாவின் கணவர் குறித்து மனம் திறந்த கலா மாஸ்டர்…

Byகாயத்ரி

Jul 30, 2022

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு நுரையீரல் தொற்று இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தொடர்ந்து அவரது மரணத்திற்கான காரணம் பற்றி பல வதந்திகளும் உலா வர தொடங்கிய நிலையில், மீனா அறிக்கை வெளியிட்டு, வதந்தி பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில் தற்போது கலா மாஸ்டர் அளித்திருக்கும் பேட்டியில் மீனா கணவர் மரணத்திற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.”பாம்பேவில் இருக்கும் புறா எச்சம் இருந்தால், சுவாசித்தாலே தவறு என சொல்வார்கள். பெங்களூரில் அது நிறைய இருக்கிறது. இப்படி லட்சத்தில் ஒருவருக்கு தான் தொற்று ஏற்படும். அது சாகருக்கு வந்துவிட்டது” என கலா மாஸ்டர் வருத்ததுடன் தெரிவித்து இருக்கிறார்.