• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

விமானப்படைக்கு 94ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன…

Byகாயத்ரி

Jun 28, 2022

முப்படைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய ‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. வடமாநிலங்களில் போராட்டம் வெடித்தபோதிலும், திட்டம் வாபஸ் பெறப்படாது என்று கூறிவிட்டது. ராணுவம், விமானப்படை, கடற்படை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஆள்தேர்வு நடைபெறுகிறது. விமானப்படைக்கான ஆள்தேர்வு பணி கடந்த 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம், அன்று காலை 10 மணி முதல் செயல்பட தொடங்கியது. நேற்று காலை 10.30 மணி நிலவரப்படி, 94 ஆயிரத்து 281 பேர் விண்ணப்பித்துள்ளதாக ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு தெரிவித்தார். விண்ணப்பம் செய்ய ஜூலை 5-ந் தேதி கடைசிநாள் ஆகும்.