• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அட்ஜஸ்மெண்டுக்கு என்னை அழைத்தார் நடிகர் பகிரங்க குற்றசாட்டு

Byதன பாலன்

Mar 29, 2023

பாலியல் தொந்தரவு, வாய்ப்புக்காக அட்ஜஸ்மெண்ட் என்பது சினிமாவில் நடிகைகளுக்கு மட்டுமல்ல அழகான அறிமுக நடிகர்களுக்கு பெண்களால் தொந்தரவு, மறுத்தால் மிரட்டல், படத்தில் இருந்து நீக்குவது போன்ற நிகழ்வுகள் எல்லா மொழி சினிமாவிலும் உண்டு என கூறப்பட்டு வந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொல்வது கிடையது இந்த நிலையில்1992ம் ஆண்டு பீதாம்பரி எனும் படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரவி கிஷன். தெலுங்கு, தெரே நாம், டானு வெட்ஸ் மனு பாலிவுட் மற்றும் போஜ்புரி படங்களில் நடித்துள்ள இவர், தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

சினிமா நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் உள்ளிட்ட பலரும் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை வைத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றனர்.

பெண்களுக்கு மட்டும் தான் சினிமாவில் இது போன்று பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் தொல்லைகள் இருப்பதாக பார்த்தால் நடிகர்களுக்கும் அதை விட மோசமாக சினிமா ஹீரோயின்களே டார்ச்சர் கொடுப்பதாக திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்
ரவி கிஷன்.

ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்ப காலக்கட்டத்தில் தேர்வான போது, எல்லாம் ஓகே ஆகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. அப்போது திடீரென அந்த பெண் பிரபலம் எனக்கு போன் பண்ணி நைட் காப்பி குடிக்க வறீங்களான்னு கேட்டார். பொதுவாகவே காபியை பகலில் தானே குடிக்க அழைப்பார்கள். அதுவும் சாதாரண நடிகர் என்னை இப்படி அந்த நடிகை அழைத்ததும் விஷயத்தை புரிந்து கொண்டு வேண்டாம் என மறுத்தேன்.
ஆனால், அந்த நடிகை விடாமல் என்னை டார்ச்சர் செய்தார். என் அப்பா என் கிட்ட குறுக்கு வழியில போய் எப்போதுமே சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் அது நிலைக்காது எனக் கூறியது தான் நினைவுக்கு வந்தது. அந்த நடிகையின் இச்சைக்கு சம்மதிக்காத நிலையில், அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது தான் எல்லா விஷயமும் முழுமையாக எனக்கு புரிந்தது என்று கூறியுள்ளார்.

அந்த பெண் பிரபலம் யார் என்கிற கேள்வியை தொகுப்பாளர் திடீரென எழுப்ப, வேண்டாம் அவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இப்போ அவர் மிகப்பெரிய பிரபலம். நக்மாவுக்கும் எனக்கும் காதல் என்று பேசினர். நாங்கள் படங்களில் தொடர்ந்து நடித்ததால் அப்படி கூறினர். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு முன்பே எனக்கு திருமணம் ஆகி விட்டது’ என ரவி கிஷன் கூறினார்.”