• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

“சென்னையில் அந்த நாள்.. என்னால் மறக்கவே முடியாது!”- வாசிம் அக்ரம்!

ByA.Tamilselvan

Feb 27, 2023

பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது சுயசரிதையை சுல்தான் என்ற பெயரில் புத்தகமாக எழுதி உள்ளார். சுல்தான் புத்தகத்தில் ஒரு நினைவுக் குறிப்பு பற்றிய விவாதத்தின் போது வாசிம் அக்ரம் கூறியதாவது;-.

சென்னையை என்னால் மற்க்கவே முடியாது நெகிழ்ச்சியாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்!
2009ல், என் மனைவியுடன் சிங்கப்பூர் செல்லும்போது, எரிபொருள் நிரப்ப விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது;அப்போது திடீரென என் மனைவி சுயநினைவை இழந்தார்.என்னிடம் அந்நேரத்தில் இந்திய விசாவும் இல்லை, விமான நிலையத்திலேயே அழுதுவிட்டேன். அப்போது சென்னை விமான நிலைய அதிகாரிகள்,’விசா தொடர்பான வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் உங்கள் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என கூறினார்கள். என் வாழ்நாளில் அந்த நாளை மறக்க முடியாது! சென்னை குறித்து நெகிழ்ச்சியாக பேசிய பாக்., முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்