• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோரிக்கை வெற்றி அமைச்சருக்கு நன்றி-மதுரை வெங்கடேசன் எம்.பி.அறிக்கை

ByKalamegam Viswanathan

Mar 4, 2023

பழைய பென்சன் திட்டம் கோரிக்கை இப்போது வெற்றி வெற்றி பெற்றுள்ளது இது குறித்து சு.வெங்கடேசன்நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளார்..
ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் 22.12.2003 அன்று புதிய பென்சன் திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த தேதிக்கு முன்பு வேலைவாய்ப்பு விளம்பரம் வந்தது 01.01.2004 க்கு பின்னர் பணி நியமனம் பெற்றவர்களுக்கு வரையறுக்கப்பட்ட பழைய பென்சன் திட்டம் தரப்படாமல் இருந்தது. அவர்களுக்கு பழைய பென்சன் திட்டமே வழங்கப்பட மத்திய பணியாளர் துறை அமைச்சருக்கு 27.10.2021 அன்று நான் கடிதம் எழுதி இருந்தேன்.

அந்த கோரிக்கை இப்போது வெற்றி வெற்றி பெற்றுள்ளது. மத்திய பணியாளர் துறை அமைச்சருக்கு நன்றி!
புதிய பென்சனில் இருந்து பழைய பென்சன் திட்டத்திற்கு மாற வாய்ப்பு பெற்றுள்ள சுமார் 20 000 ஆக்கும் மேற்ப்பட்ட ஊழியர்களுக்கு என் வாழ்த்துக்கள்!இந்த வெற்றியையும் கடந்து அனைத்து ஊழியர்களுக்கும் புதிய பென்சன் திட்டம் ரத்து ஆகி பாதுகாக்கப்பட்ட பென்சன் கொண்ட பழைய பென்சன் திட்டம் மீட்கப்பட குரல் கொடுப்போம். எனது குரலும் இணையும். இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்