உலக மூட்டுவாத தினத்தை முன்னிட்டு, மூட்டுவாதம் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் விஜிஎம் மருத்துவமனையின் ஓர் அங்கமான விஜிஎம் ஆர்த்தோ கேர் சார்பில் ‘ஹால்ட் ஆர்த்ரைட்டிஸ் 2026’ என்ற விழிப்புணர்வு நடைப்பேரணி நடைபெற்றது.

இதில் 6 கல்லூரிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட துணை மருத்துவப் படிப்பு மாணவர்கள் பங்கேற்றனர். விஜிஎம் ஆர்த்தோ கேர் பிரிவின் தலைவரும், மூட்டுவாதம் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சுமன் சிபிஎஸ் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

டாக்டர் சுமன் சிபிஎஸ் பேசுகையில், வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும் மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், ஐஏஎஸ், நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ள வழிகாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் விஜிஎம் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத், டாக்டர் மதுரா பிரசாத் சுமன், டாக்டர் வம்சி மூர்த்தி கே. டாக்டர் மித்ரா பிரசாத் மற்றும் டாக்டர் கோகுல்க்ருபா சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





