• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

கழிவு நீர் வெளியேற்றும் பணிகளை பாதியில் விட்டு சென்ற அதிகாரிகளால் பொதுமக்கள் கடும் அவதி..,

ByKalamegam Viswanathan

Oct 29, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் குளம்போல் தேங்கிய மழைநீரில் பேருந்துகள் மிதந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் ஆறாக ஓடியதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

மேலும் அப்போது அந்த வழியாக சென்ற சோழவந்தான் தவெக எம்எல்ஏ கருப்பையா தேங்கிய கழிவுநீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் சென்றதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலை சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்த நெடுஞ்சாலை துறை வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி துறை அதிகாரிகள் மழை நீரில் தேங்கிய கழிவுநீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார்கள் மழைநீர் தேங்கிய பகுதிகளை விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் முன்பு இருந்த படிக்கட்டுகளை அகற்றியதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த பகுதியில் இருந்த அதிமுக நிர்வாகி ராமச்சந்திரன் அதிகாரிகளிடம் கூறும்போது இந்த பகுதியில் மழை பெய்தவுடன் குளம்போல் தண்ணீர் தேங்குவதாகவும் கழிவுநீரும் கலந்து செல்வதாகவும் பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் தற்போது வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை தண்ணீர் வெளியேற்றுவதற்கான வாய்ப்புகளையும் அதிகாரிகளிடத்தில் கூறிய பின்பும் அது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. நேற்று பெய்த மழை காரணமாக குளம் போல் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதாக கூறி சம்பந்தமில்லாத இடத்தில் கடைகளுக்கு முன்பு படிக்கட்டுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகள் காரணமாக மழை நீரோ கழிவுநிரோ வெளியேறி செல்ல வாய்ப்பு இல்லை. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் பணிகளை செய்ய வேண்டும் மற்றும் மழை நீரை வெளியேற்ற முழு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.

அங்கிருந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கடைகளில் முன்பு உள்ள படிக்கட்டுகளை அப்புறப்படுத்த மட்டுமே எங்களுக்கு கூறியுள்ளார்கள் மற்ற வேலைகளை செய்ய பேரூராட்சி அதிகாரிகள் வருவார்கள் என சாக்குப் போக்க சொல்லி பணிகளை பாதியிலேயே விட்டு விட்டு சென்று விட்டார்கள்.

நேற்று மழை பெய்யாத நிலையில் தற்போது வரை பிரச்சனை இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது அடுத்து மழை பெய்தால் மறுபடியும் குளம் போல் தண்ணீர் தேங்குவது உறுதி.

சோழவந்தான் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மழை நின்றவுடன் அதிகாரிகள் பணிகளை நிறுத்தி விட்டு சென்றது அந்த பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையால் அடுத்து மழை வருவதற்குள் மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சோழவந்தான் பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை பேரூராட்சி துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.