• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பேட்டை பகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரச்சாரம்

ByN.Ravi

Apr 8, 2024

தேனி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் சோழவந்தான் பேட்டை பகுதிகளில் பிரச்சாரத்திற்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆகியோருக்கு பேரூர் துணைச் செயலாளர் சோழவந்தான் ஸ்டாலின் ஏற்பாட்டில் ஆலுயர மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து தாரை தப்பட்டை உடன் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் வரிசையில் நின்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர் வழிநெடுக 500க்கும் மேற்பட்ட பெண்கள் மலர்கள் தூவி வேட்பாளரை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன்.., மகளிர் உரிமை தொகை ஆயிரம் வழங்கும் ஒரே முதல்வர் இந்தியாவில் தளபதி மட்டுமே. இது போல் எண்ணற்ற திட்டங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தி வந்திருக்கிறார். அதே போல் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். அதற்கு தேனி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்கள் வீட்டுப் பிள்ளை தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதில் ஒன்றிய செயலாளர் பேரூர் செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.