தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய அளவில் பெருமை
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 2019-ல் இந்திய அளவில் முதல் தரப்பெற்று தேசிய தர உறுதி சான்றிதழையும், தனியார் பரிசோதனை கூடங்களுக்கு வழங்கப்படும் NABL சான்றிதழையும் பெற்றது.

இதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஆண்டுதோறும் ரூ.4 இலட்சம் வழங்கப்படுகிறது. தற்போது இச்சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படாத நிலையில் உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.