• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைப்பூசத் திருநாள் பூஜை

Byகாயத்ரி

Jan 20, 2022

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தை திருவிழா தொடங்கி 10 நாட்கள் வரை நடக்கிறது. இதையொட்டி திருக்கொடியேற்றம் நடைபெற்றது. 2-ம் திருவிழாவில் காலை 7 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேக பூஜை, இரவு 7 மணிக்கு மண்டகப்படி, 8 மணிக்கு சொல்லரங்கம் ஆகியவை நடந்தது.
விழா நாட்களில் தினமும் சாமி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

18-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் சமய சொற்பொழிவு சப்தாவர்ணம் ஆகியவை நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான 19-ந் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஆராட்டு, ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்றவை நிகழ்ந்தது.

தைப்பூச திருநாளையொட்டி நாகநாதசுவாமி திருக்கோவிலில் நாகராஜருக்கு சிறப்பு அலங்காரத்துடன், பல்லக்கில் சயனகோலத்தில் மேலதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டது.வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபாடு செய்து பிரார்க்கனை மேற்கொண்டனர்.