• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தென்காசியில் அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கு

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோய் பற்றிய கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது.

கருத்தரங்கு காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள், குறிப்பாக தென்காசி மாவட்ட மூத்த பொது நல மருத்துவர்கள் என சுமார் 150 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரும், அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் மருத்துவர் ஜெஸ்லின் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மருத்துவர் செந்தில் சேகர் அவர்கள், மாவட்ட பொருளாளர் மருத்துவர் ராஜேஷ் கண்ணா, அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் (Dph wing) மருத்துவர் முகமது இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்புரையாற்றினார்கள்.

கருத்தரங்கில் கலந்து சிறப்பித்த தென்காசி மாவட்ட மூத்த மருத்துவர்கள் மருத்துவர் சுகந்த குமாரி, மருத்துவர் முத்தையா, மருத்துவர் ராமகிருஷ்ணன், மீரான் மருத்துவமனை மருத்துவர் அஜீஸ், முகைதீன் அகமது ஆகியோரை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்டரங்கன், துணை இயக்குனர் காசநோய் மருத்துவர் வெள்ளைச்சாமி, ஆய்க்குடி மருத்துவர் செந்தில்குமார், தென்காசி மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விஜயகுமார், மருத்துவர் மணிமாலா, தென்காசி குழந்தைகள் நல மருத்துவர் முஸ்ஸாமில், மருத்துவர் ராஜலட்சுமி கலந்து சிறப்புரையாற்றினார்கள்.

கருத்தரங்கில் உறைவிடமருத்துவர் அகத்தியன், மருத்துவர் மல்லிகா,மருத்துவர் மாரிமுத்து, புளியங்குடி அரசு மருத்துவர் ராஜ்குமார் , மருத்துவர் புனிதவதி, மருத்துவர் அனிதா பாலின், மருத்துவர் தமிழருவி, மருத்துவர் அன்ன பேபி ,மருத்துவர் கிருத்திகா ஷைலினி, மருத்துவர் கார்த்திக் ,மருத்துவர் முத்துக்குமாரசாமி, மருத்துவர் மணிமாலா, மருத்துவர் மது, மருத்துவ ராம்குமார் , மருத்துவர் செல்வ பாலா ,மருத்துவர கீர்த்தி.,மருத்துவர் தேவி உத்தமி, மருத்துவர் தயாளன், மருத்துவர் சுரேஷ் மில்லர், மற்றும் பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் மருத்துவமனை கண்காணிப்பாளரும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான (DMS wing) மருத்துவர் ஜெஸ்லின் அவர்கள், அனைத்து பேச்சாளர்களையும் கலந்துகொண்ட அரசு டாக்டர்கள் சங்க உறுப்பினர்களையும் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் (DPH)மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் கருத்தரங்கை ஏற்பாடு செய்த தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்களுக்கும், கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும், கலந்து கொண்ட அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி கூறினார்.

கருத்தரங்க நிகழ்ச்சிகளை மருத்துவர் கோபிகா,மருத்துவர் ஜெரின் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர். தோல் நோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் கோபிகா அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும், அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்திய மருத்துவர் லதா, மருத்துவர் மல்லிகா, மருத்துவர் கார்த்திக் அவர்களுக்கும், பேச்சாளர்கள் அனைவருக்கும், கலந்து கொண்ட மருத்துவர்கள் அனைவருக்கும், சுமித் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக் கொண்டார்.