ஒமைக்ரான் வைரஸ், தற்போது அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது.
இந்தியாவில் கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் முதல் ஒமைக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என பரவியது.
நேற்று வரையில் நாடு முழுவதும் 82ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு, தற்போதைய நிலவரப்படி 101- ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 32, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தலா 8 பேருக்கும், தமிழகத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய சுகாதாரத்துறை மக்கள் அவசியமின்றி பயணிப்பதையும், தேவையின்றி கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.