விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் காரணமாக கடந்த மாதம் பட்டாசு உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி அதிகரித்து வருவதாக தொடர்ந்து வந்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சாத்தூர் டவுன் சப் இன்ஸ்பெக்டர்கள் பாக்யராஜ், முருகேஸ்வரன், மற்றும் வருவாய் துறையினர். கோதைநாச்சியார்புரம், கோட்டையூர், தாயில்பட்டி, விஜய கரிசல்குளம், , வெற்றிலையூரணி, உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். மீனாட்சிபுரத்தில் கணேசன் (50) என்பவரது வீட்டில் தகர செட்டில் பதுக்கி வைத்திருந்த 40 பெட்டியில் இருந்த சரவெடிகள், 2000 வாலா சரவெடிகள் 35 பெட்டிகள் ,வெள்ளை திரி 20 குரோஸ், மற்றும் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் ஆய்வின் போது கணேசன் தலைமறைவாகிவிட்டார். வெம்பக்கோட்டை தெற்கு தெருவில் பாண்டியன் (30 ) இவருக்கு சொந்தமான தகர செட்டில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது பத்து கிலோ சோல்சா வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோதை நாச்சியார்புரம் காலனி தெருவில் ஆவுடை சங்கையா (47) பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது அவரிடம் இருந்த 5 பெட்டிகளில் சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இதே ஊரை சேர்ந்த குருசாமி (52) இவர் வீட்டில் 20 பெட்டியில் இருந்த சரவெடிகள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெற்றிலையூரணியில் மாரியப்பன் (60) என்பவர் வீட்டில் 20 கிலோ சோல்சா வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததாக ஐந்து பேர் மீதும் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






; ?>)
; ?>)
; ?>)
