• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரகதி மருத்துவமனையில் புதிய பல்துறை சிறப்பு பிரிவு

BySeenu

Dec 20, 2024

கோவை பிரகதி மருத்துவமனையில் புதிய பல்துறை சிறப்பு பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளது.

புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய பல்துறை சிகிச்சை மையமாக தரம் உயர்த்தப்பட்ட பிரகதி மருத்துவமனையை மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் எலும்பு முறிவு தொடர்பான சிகிச்சை வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு வந்த பிரகதி மருத்துவமனை பல் துறை சிகிச்சை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

புதிய விரிவுபடுத்தப்பட்ட வசதிகளுடன் பன்முக மருத்துவ சேவையை வழங்கும் விதமாக தரம் உயர்த்தப்பட்ட பிரகதி மருத்துவமனையை மகராஷ்டிரா ஆளுநர் சி.பி.இராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இது குறித்து ,பிரகதி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன், கூறுகையில்..,

ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வநத பிரகதி மருத்துவமனையில் தற்போது, புதியதாக பல்வேறு சிகிச்சை பிரிவுகள் துவங்கி உள்ளதாகவும் குறிப்பாக, விபத்து மற்றும் அவசரநிலை, எலும்பியல் துறையில், மூட்டு மாற்று, இடுப்பு மற்றும் முழங்கால் மாற்றுதல் பிரிவு, முதுகெலும்பு அறுவை சிகிச்சை, தலைக்காயம் மற்றும் நரம்பியல், பொது மருத்துவம், நீரிழிவு நோய், இதயவியல், நுரையீரல் ஆய்வு, பெண்கள் மையம், குழந்தைகள் தனி சிகிச்சை பிரிவு என அனைத்து தர சிகிச்சைகளும் நவீன தொழில் நுட்ப உபகரணங்களை கொண்டு, அனுபவம் வாய்ந்த திறமையான மருத்துவர்கள் சிகிச்சை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.