மதுரை மண்டல நகர் ரிங்கோட்டில் பைக்கில் வந்த வாலிபர்கள் சாலையில் உள்ள கல்லில் மோதி சம்பவ இடத்தில்
ஒருவர்பலி. மற்றவர் படுகாயம்
மதுரை மண்டேலா நகர் ரிங் ரோட்டில் பைக்கில் வந்த வாலிபர்கள் அருகில் இருந்த கல்லில் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் பலி மற்றொருவர் படுகாயம் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாநகர போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் மற்றும் அவனியாபுரம் போலீசார் முதல் கட்ட விசாரணையில்
மதுரை ஆண்டார் கொட்டாரம் கருப்பபிள்ளை ஏந்தல் பகுதியைச் சேர்ந்தமுத்துகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமார் வயது 27 என்றும் சுரேஷ்குமாரின் நண்பர் மதுரை மாவட்டம் பொதும்பு ஐயப்பன் பிள்ளை வடக்கு தெருவை சேர்ந்த யூசுப் என்பவரின் மகன் சேர் வயது 27 என்றும் தெரியவந்தது இதில் பைக்கை ஓட்டி வந்த அசோக் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார் படுகாயம் அடைந்த சேட் அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் குடிபோதையில் வாகனத்தை ஒட்டி வந்த வாலிபர்கள் நிலை தடுமாறி அருகில் இருந்த கல்லில் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானது தெரியவந்தது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .மற்றும் விபத்தில் பலியான சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரதேஷ் சுரேஷ்குமாருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
மதுரை அருகே பைக்கில் வந்த வாலிபர்கள் சாலையில் உள்ள கல்லில் மோதி பலி
