எச்.வினோத்இயக்கதில், தல அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, அதேபோல் இப்படத்தின் டீசரையும் விரைவில் வெளியிட உள்ளதாம். அதன்படி இப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த டீசர் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.