• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய டீச்சர்

ByA.Tamilselvan

Nov 8, 2022

தனது பள்ளியில் பயிலும் மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண் டீச்சர் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான், பரத்பூரில் பெண் பிடி டீச்சர் ஒருவர் ஆணாக மாறி பள்ளியில் பயிலும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்தவர் மீரா. பள்ளியில் உடற்கல்வி வகுப்புகளின் போது மீரா மாணவி கல்பனாவை சந்தித்துள்ளார். அப்போது அவர் கல்பனா மீது காதல் வயப்பட்டுள்ளார். இருவரும் சிறிது காலம் பலகி வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். பள்ளி காதல் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், கல்பனாவை திருமணம் செய்துக்கொள்ள தான் ஆணாக மாற மீரா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். மீரா ஆணாக மாறி ஆரவ் குந்தல் என்று பெயர் மாற்றிக்கொண்டார். இறுதியாக குடும்பத்தினரை சமாதானப்படுத்தி கல்பனாவை மணந்துள்ளார்.