கோவையில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், கால முறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், பார்களுடன் அல்லாமல் டாஸ்மாக் கடைகள் தனித்து இயங்க வழிவகை செய்தல், டாஸ்மாக் வசூல் தொகையை வங்கியில் இருந்து நேரடியாக வந்து வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்.டி.யூ.சி. கோவை மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளுடன் வந்த தொழிலாளர்கள், தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்களாக எழுப்பினர்.