• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து..,

ByG.Suresh

Apr 18, 2025

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே உள்ள தனியார் சக்கரை ஆலையில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் மொளசஸ் என்ற திரவத்தை ஏற்றிக்கொண்டு மதுபான ஆலைக்கு சென்றது. டேங்கர் லாரி, சோழபுரம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டேங்கர் லாரியில் இருந்த திரவம் முழுவதும் சாலையில் கொட்டி வீணானது.

படுகாயம் அடைந்த திருவண்ணாமலை சேர்ந்த பாலமுருகன் என்ற டேங்கர் லாரி ஓட்டுனர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் . சம்பவம் அறிந்து வந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபானம் தயாரிப்பிற்கு மூலப் பொருளாக கருதப்படும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மொளாசஸ் திரவம் சாலையில் கொட்டி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.