• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காளையார் கோயிலில் ஒரு மணி நேரமாக கனமழை..,

ByG.Suresh

Apr 18, 2025

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்த நிலையில் காளையார்கோயில், நாட்டரசன் கோட்டை, கொல்லங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திடீரென வானத்தில் கார்மேகங்கள் சூழ்ந்து ஒரு மணி நேரமாக கன மழை பெய்து வருகிறது.

இடி மின்னலுடன் பெய்த மாழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையை எதிர்பாராத பயணிகள் ஆங்காங்கே பாதுகாப்பாக கடைகளில் ஒதுங்கி நின்றனர். மேலும் இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.