• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ரேஷன் கார்டில் புதிய தகுதி வரம்புகளை கொண்டு வர இருக்கும் தமிழக அரசு..

Byகாயத்ரி

Aug 20, 2022

நாடு முழுவதும் ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் அழிவுகளிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். ஆனால் ரேஷன் திட்டத்தில் வசதி படைத்தவர்களும் பயன் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே அவர்களை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை நடத்தியது.

அதன்படி விரைவில் வறுமை கோட்டின் தரத்தை அரசு மாற்ற உள்ளது. இதன் மூலமாக வறுமை கோட்டு பட்டியலில் இருந்து பலரும் வெளியேறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. விரைவில் புதிய தகுதி வரம்புகளை வழங்குவதன் மூலம் மோசடி வலிகளை பயன்படுத்துப்பவர்களை அரசு கட்டுப்படுத்த கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகாத நிலையில் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.