• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

யானை லட்சுமியின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை தமிழிசை சௌந்தரராஜன்

யானை லட்சுமியின் இறப்பு ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலாகும். இந்த ஆலயத்தில் லட்சுமி என்ற பெண் யானை உள்ளது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது. தந்தத்துடன் கூடிய பெண் யானையாக காட்சிதந்த லட்சுமி காலில் கொலுசு அணிந்தும் முக்கிய நாட்களில் நெற்றிப்பட்டம் அணிந்தும் காட்சி தந்து, இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளித்து அனைவரின் அன்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் லட்சுமி வழக்கம்போல் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தது. மக்கள் அஞ்சலிக்காக கோவில் வளாகத்தில் யானை லட்சுமியின் உடல் வைக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த லட்சுமிக்கு புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில்
அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களை சந்தித்த கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது. லட்சுமி இல்லாமல் கோவிலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. லட்சுமி உயிரிழந்தது அதிர்ச்சியான செய்தியாகும். தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி செல்வாள் லட்சுமி. லட்சுமியின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.