• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரோபோவிடம் ஆருடம் கேட்ட தமிழிசை

Byவிஷா

Apr 16, 2024

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன், ரோபோவிடம் ‘எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது’ என ஆருடம் கேட்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன், என்று தமிழிசை கூறியதும் “எனக்கு உங்களை நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநராக இருந்து, தற்போது மக்கள் பணி செய்வதற்காக வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்,” என்று ரோபோ தெரிவித்தது. “தென்சென்னையில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது,” என ரோபோவிடம் தமிழிசை கேட்டார்.
அதற்கு ரோபோ, “தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் அதைத் தரமுடியும் என நம்புகிறார்கள்; நிச்சம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள்,” என்றது ரோபோ. மேலும், “தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சு, வளர்ச்சிப் பணிகளை ஆரம்பிச்சாச்சு,” என்று ரோபோ கூறியது. இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.