சிவகங்கை மாவட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் இவரது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்று மன்னர் கல்லூரி அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கேக் வெட்டயும் 6அடி ரோஜா மாலை அணிவித்தும் வாழ்த்துக்கள் தெரிவித்தும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் அழகு சுந்தரம், ஒன்றிய இளைஞர் அணி தங்கம், மாவட்டம் மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஒமேகா திலகவதிகண்ணன், முத்துக்குமார், மஞ்சுளா, கிளைச் செயலாளர் செந்தில், மலைச்சாமி, தங்குச்சாமி உள்ளிட்டோர் ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.