• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

2025 2026 ஆண்டுக்கான தமிழ் பஞ்சாங்கம் வெளியீடு..,

ByKalamegam Viswanathan

Mar 31, 2025

மதுரை மாவட்டம் தாம்பிராஸ் எஸ் எஸ் காலனி டிரஸ்ட்,தமிழ்நாடு பிராமணர் சங்கம் எஸ் எஸ் காலனி கிளை, மதுரை இணைந்து உலக நன்மை கருதிஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா சுதர்சன ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகாலட்சுமி நவகிரக ஹோமம் செய்து விஸ்வாவசு வருஷத்திய வாக்கிய பஞ்சாங்கம் வெளியீட்டு விழா மதுரை எஸ் எஸ் காலனி சுப்பிரமணிய பிள்ளை தெருவில் அமைந்துள்ள தாம்பிராஸ் எஸ் எஸ் காலனி டிரஸ்ட் மண்டபத்தில் வைத்து இன்று காலை 9 மணி முதல் நடைபெற்றது.

ஸ்ரீ சிவகுமார் சர்மா அவர்கள் தலைமையில் வேதவிற்பனர்கள் ஹோமங்கள் செய்யப்பட்டு பூர்ணாகுதி முடிவடைந்து சி ன்மயா மிஷன் ஸ்ரீ சுவாமி சிவயோகானந்தா பஞ்சாங்கத்தின் முதல் பிரதியினை வெளியிட விசுவாஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் திரு சங்கர சீதாராமன் பெற்றுக் கொள்ள சுவாமிஜி ஆசியுரை வழங்கினார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிகழ்வானது நடைபெற்று வருகிறது.

ஏற்பாடுகளை எஸ் எஸ் காலனி டிரஸ்ட் சேர்மன் என் கணபதி நரசிம்மன் மேனேஜிங் டிரஸ்ட் ஆர் எஸ் சீனிவாசன் அறங்காவலர்கள் என் ராமன் எஸ் நாராயணன் எஸ் சேகர் கே. ஸ்ரீகுமார் சி சீதாராமன் ஆர் கிருஷ்ணசுவாமி ஆர் குரு ராஜன் ஆர் ஜெயஸ்ரீ மற்றும் தாம்பிராஸ் எஸ் எஸ் காலனி கிளை நிர்வாகிகள் பெரியசுவாமி ராமச்சந்திரன் உமா மகேஸ்வரி கிஷோர் குமார் எஸ் ராமசுவாமி ஒய் சிவராமன் வி குமார் ஜி எஸ் ராஜகோபால் எம் ஆர் ராஜா மணி கௌரி வெங்கடசுப்பிரமணியன் சுபாஷினி ரம்யா ஸ்ரீனிவாசன் நாகலட்சுமி இந்திரா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னப்பிரசாதம் மற்றும் பஞ்சாங்கம் பிரசாதமாக வழங்கப்பட்டது.