சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளை சார்பாக நடைபெற்ற 11 வது இரத்ததான முகாம் மாநிலச் செயலாளர் சகோதரர் ரபீக் முஹம்மது தலைமையிலும், மாவட்ட தலைவர் ஆசிப் முகமது மற்றும் மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் தீன் மற்றும் மாவட்ட மருத்துவமனை செயலாளர் வரிசை முகமது முன்னிலையிலும் நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் அன்னராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் 50-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தங்கள் குருதியை தானமாக வழங்கினர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சித்து ஹரி தலைமையிலான மருத்துவ குழுவினர் குருதிகளை சேகரித்தனர். இதில் நகர தலைவர் ஹூமாயூன் கபூர் செயலாளர் காதர்மைதீன், பொருளாளர் உமர், துணைத்தலைவர் ராஜாமுஹம்மது, துணைச்செயலாளர் மன்சூர் மற்றும் மருத்துவஅணி செயலாளர் நஸ்ருதீன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
