தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் 2022 முதல் 2026 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தலுக்கான பொதுக் குழுக் கூட்டமானது 15.5.2022 ஆம் நாளன்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மேற்கு ரயில்வே மும்பையைச் சேர்ந்த IRS அதிகாரி காளிமுத்து தேர்தல் அதிகாரியாகவும், வலுதூக்கும் இந்தியா கூட்டமைப்பின் தேர்தல் பார்வையாளராக ஆந்திர மாநில வலுதூக்கும் சங்க செயலாளர் கோட்டீஸ்வர ராவ் தேர்தல் நடத்துனராக ஹரிதாஸ் முன்நின்று இத்தேர்தலை நடத்தினர். இப் பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதிலிருந்தும் 27 மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் ஒருமனதாக தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் தலைவராக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இ. ராஜா , பொது செயலாளராக கோவை மாவட்டத்தை சேர்ந்த தென்னக ரயில்வேயில் பணிபுரியும் எஸ் நாகராஜன் , பொருளாளராக ஐசிஎப் நிறுவனத்தில் பணிபுரியும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் சேர்மன் மோகன் சங்கர் அவர்களும் மற்றும் 27 மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இறுதியாக ஏற்புரை வழங்கிய தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் புதிய தலைவர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா வருகின்ற ஜூன் மாதம் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை கோவையில் நடைபெற உள்ள ஆசிய வலுதூக்கும் போட்டியை சிறப்பாக நடத்துவதோடு மட்டுமல்லாமல் அப்போட்டியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளச் செய்ய ஆவண செய்வேன் என்று உறுதியளித்தார்.
தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
