• Wed. Dec 11th, 2024

தமிழகத்தில் புயல் நிவாரண நிதி ரூ.6000 முதலமைச்சர் அறிவிப்பு..!

Byவிஷா

Dec 9, 2023

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு புயல் நிவாரண நிதியாக 6000 ரூபாயை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
‘மிக்ஜாம்’ புயலால் பெய்த தொடர் மழையால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கடும் பாதிப்பிற்குள்ளானது. இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக 6000 ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.