• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு 4ஆவது இடம்

Byவிஷா

Oct 28, 2024

இந்தியாவின் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு 4ஆவது இடத்தையும், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தையும் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் மாநிலங்களின் நேரடி வரி வருவாய் மற்றும் வருமான வரி வருவாய் குறித்து எஸ்.பி.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி விதிப்பின் மூலம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா 38.9 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, டில்லியைப் பின்னுக்குத் தள்ளி கர்நாடகா 2வது இடத்தை பிடித்துள்ளது.
டில்லி 3வது இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும், குஜராத் 5வது இடத்திலும் உள்ளது.
ஒட்டுமொத்த நாட்டின் வரி வருவாயில் இந்த டாப் 5 மாநிலங்கள் மட்டுமே 70 சதவீதத்தை கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வளர்ச்சி ஏற்றத்தாழ்வு 10 ஆண்டுகளில் 74 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ராஜஸ்தான், பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, மத்திய பிரதேசம் மற்றும், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மூலதன நேரடி வரி வருவாயில் பின்தங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரியைப் பொறுத்தவரையில் கடந்த 2015ம் ஆண்டை காட்டிலும், 2024ல் 5.1 கோடி பேர் கூடுதலாக வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.
வருமான வரி வருவாயில் மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. இந்த மாநிலங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 48 சதவீதம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, வருமான வரித்தாக்கல் செய்பவர்களில் 15சதவீதம் பெண்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த தசாப்தத்தில், குறைந்த வருமானம் கொண்ட குழு (ரூ. 5.5 லட்சத்திற்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள்) தொடர்ந்து நேர்மறையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது, ஒரே விதிவிலக்கு மதிப்பீடு ஆண்டு 2020, கோவிட்-19 தொற்றுநோயால் வளர்ச்சி எதிர்மறையாக பாதிக்கப்பட்டது. 2025ம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.