• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை கட்டிட விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அஞ்சலி..!

Byகுமார்

Dec 22, 2021

மதுரையில் கட்டிட விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலுக்கு தமிழக காவல்துறை டிஜிபி நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


மதுரை கீழவெளிவீதி பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்த விபத்தில் இரவு நேர ரோந்து பணியில் இருந்த மதுரை விளக்குத்தூண் காவல்நிலைய தலைமைக்காவலர்கள் சரவணன் மற்றும் கண்ணன் ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியதில் காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். படுகாயமடைந்த காவலர் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.


இந்நிலையில் கட்டிட விபத்தில் உயிரிழந்த காவலர் சரவணனின் உடல் மதுரை கிரைம்பிராஞ்ச் பகுதியிலுள்ள காவலர் குடியிருப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு காவலர் சரவணனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் காவலரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தென்மண்டல ஐஜி அன்பு, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், எம்.எல்.ஏக்கள் பூமிநாதன் , வெங்கடேசன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


இதனையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு சம்பவம் நடைபெற்ற பகுதியை ஆய்வு மேற்கொண்ட பின்னர், சிகிச்சையில் உள்ள காவலர் கண்ணன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து டிஜிபி சைலேந்திரபாபு :

இரவு ரோந்து பணியின் போது கட்டிட விபத்தில் உயிரிழந்த தலைமைகாவலர் சரவணனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம், சரவணின் குடும்பத்தினருக்கு 25லட்சம் நிதியுதவியும், அரசு பணியும், கண்ணனின் குடும்பத்திற்கு 5லட்சம் நிதியுதவியும் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம் எனவும், கண்ணன் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் எனவும், மதுரை நகரில் பழமையான கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் இனி இது போன்ற நிகழ்வு நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்டிட இடிந்த விவகாரத்தில் வழக்குபதிவு விசாரணை நடைபெற்றுவருகிறது என்றார்.