• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜன.6ல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் : ஆளுநருக்கு அழைப்பு

Byவிஷா

Jan 5, 2025

வருகிற ஜனவரி 6 திங்கட்கிழமையன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதையொட்டி, தமிழக ஆளுநர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக ஆளுநருக்கு, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும். அந்த வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். ஒரு கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை முழுமையாகப் படிக்காததால், சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில், 2025-ம் ஆண்டுககான சட்டப்பேரவை முதல் கூட்டம் வரும் 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை ராஜ்பவனில் நேற்று சந்தித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு, முதல் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது, பேரவைச் செயலர் கி.சீனிவாசன் உடனிருந்தார்.