• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டம்..!

Byவிஷா

Jan 27, 2024

டிஎன்பிஎஸ்ஸி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டு தோறும் அரசு வேலைக்காக முயற்சிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பல மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து, போட்டி தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். ஏழை, எளிய மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மையங்கள் மூலமாக கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 பேருக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 பேருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள மாணவர்கள், இணையம் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறும். 6 மாத காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்குமிட வசதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.