• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

1,771 புதிய பஸ்கள் வாங்க தமிழக அரசு முடிவு

ByA.Tamilselvan

Oct 11, 2022

தமிழகத்திற்கு புதிதாக 1,771 அரசு பஸ்களை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.
தமிழகத்திற்கு புதிய பஸ்களை வாங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இதில் மின்சார பஸ்களும் அடங்கும். அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ‘பிஎஸ்-4’ ரக பஸ்கள் வாங்கப்பட உள்ளன. இந்த ரகத்தில் 1,771 பஸ்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் அரசு போக்குவரத்துக்கழக மண்டலங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பஸ்களும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பஸ்களும் வழங்கப்பட உள்ளன. சேலம் மண்டலத்திற்கு 303 பஸ்களும், கோவை மண்டலத்திற்கு 115 பஸ்களும், கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பஸ்களும், மதுரை மண்டலத்திற்கு 251 பஸ்களும், நெல்லை மண்டலத்திற்கு 50 பஸ்களும் வழங்கப்படும். இந்த பஸ்களை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.