• Sat. Apr 20th, 2024

மனித சங்கிலி கடைசி எச்சரிக்கையாக இருக்கும்- திருமாவளவன்

ByA.Tamilselvan

Oct 11, 2022

இன்று நடைபெறும் மனித சங்கிலிப்போராட்டம் வலதுசாரிகளுக்கு கடைசி எச்சரிக்கையாக இருக்கும் என திருமாவளவன் பேச்சு.
பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் நினைவு தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில் …உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் சாதி, மதவாத அரசியலுக்கு இடமில்லை. சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை. சமூக நீதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மட்டுமே இந்த மண்ணில் எப்போதும் இடமுண்டு என்பதை உணர்த்தக் கூடிய வகையில் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.
இன்று மாலை 4 மணி அளவில் திட்டமிட்ட இடங்களில் இந்த அறப்போர் வெற்றிகரமாக நடைபெறும். லட்சக் கணக்கானோர் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். சென்னையில் பெரியார் சிலையில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெறும். முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் சங்பரிவார் வலதுசாரி அமைப்புகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பது உணர்த்துவதற்காகதான் இந்த அறப்போர் நடைபெறுகிறது. வலதுசாரிகளுக்கு இது கடைசி எச்சரிக்கையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *