• Sun. May 5th, 2024

தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழக அரசு..!

Byவிஷா

Dec 7, 2023

சென்னையில் நிவாரணப் பணிகளுக்காக தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் 3 நாள்களாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் நகரின் பல்வேறு இடங்களில் மக்கள் தவித்து வருகின்றனர்.
மழை குறைந்ததை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை முதல் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர். பல்வேறு நபர்களும், தொண்டு நிறுவனங்களும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுடன் இணைந்து உதவ முன்வரும் நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் 9791149789, 9445461712, 9895440669, 7397766651 ஆகிய எண்கள் மூலம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்கள் தொடர்பு கொள்ள சென்னை பெருநகர காவல் உதவி மையம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 23452359, 23452360, 23452361, 23452377, 23452437 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி மழைநீரை அகற்றுதல், மரங்களை வெட்டும் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *