• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் அம்பேத்கர் சிலையை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார் !

Byp Kumar

Dec 9, 2022

மதுரை பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிக்காக கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆகியோர் விழா மேடையில் இருந்தவாரு ரிமோட் மூலம் சிலையை திறந்து வைத்தனர். பின்னர் அம்பேத்கர் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அம்பேத்கர் முழு உருவ சிலையையும் கல்வெட்டுகளை முதல்வருக்கு திருமாவளவன் காண்பித்தார். பின்னர் முதல்வர் விமானம் மூலம் சென்னை சென்றார். தொடர்ந்து திருமாவளவன் அம்பேத்கரை போற்றும் வீதமாக வீர வணக்கம் செலுத்தினார்.