• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டண உயர்வை கட்டுப்படுத்த வலியிறுத்தி தமிழ்நாடு கேபிள டிவி ஆப்பரேட்டர்கள் ஆர்ப்பாட்டம். மின் கம்பியில் கட்டப்பட்ட கேபிள் வயர்களை மின் ஊழியர்கள் வெட்டி விடுவதாக வேதனை.
கட்டண சேனல்களுக்கான தொகையை உயர்த்தி தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதை கண்டித்தும், மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி வயரை வெட்டிவிடும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரே கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்த்தப்பட்டுள்ள இந்த கேபிள் சேனல் கட்டணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே உயர்த்தப்பட்ட கட்டிடத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதேபோல் கேபிள் வயர்களை மின்கம்பம் வழியாக கொண்டு செல்வதால் இதுவரை எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாத நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டதுடன் கேபிள் ஒயர்களை வெட்டிவிடுவதாக வேதனை தெரிவித்ததுடன், மின்கம்பத்தில் வயர்களை கட்டுவதற்கு உரிய கட்டணத்தை செலுத்த கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.