• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கத்தின் 12-வது ஆண்டு பொது குழுக்கூட்டம்

Byகுமார்

Aug 16, 2024

தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கத்தின் 12-வது ஆண்டு பொது குழுக்கூட்டம், ஏற்றுமதியாளர்கள், விற்பனையாளர்கள் கூட்டம், தொழில்துறை சட்டங்கள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் என முப்பெரும் விழா, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீகாமாட்சி மகால் நடந்தது. மாநில தலைவர் முனைவர் திருமுருகன் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர் விஜீஷ், சங்கத்தின் ஆண்டறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் விஜயன், சங்க நிதிநிலை அறிக்கை சமர்பித்தார். ஜப்பான் கருணாநிதி, மலேசியா லோகநாதன், சைனா தண்ணீர்மலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிராண்ட்ஸ் மற்றும் டிரேட்மார்க் முக்கியத்துவம், பாதுகாப்பு குறித்து, ஜே.கே.முத்து பேசினார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா குத்து விளக்கு ஏற்றினார். சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் ஜெயபிரகாசம், தலைவர் வேல்சங்கர், மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகள் மற்றும் வங்கி உதவிகள் குறித்த கலந்தாய்வு கூட்டமும், தொழில்துறை சட்டங்கள் பற்றிய கலந்தாய்வு கூட்டமும் நடந்தது. இதில், அமெரிக்கா, ஜப்பான், ஓமன், மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள், தொழல்நுட்ப வல்லுனர்கள், வணிகவியலாளர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள அப்பள சங்கத்தை சேர்ந்த 500-க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிர்வாகிகள் கார்த்திக், அறிவுமணி, சண்முகவேல், பால்கனி, செல்வம், பழனிகுமார், மணிகண்டன், சந்துரு உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர். முடிவில், இணை செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

அப்பளம், வடகம், மோர் வத்தல் போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்களை பாதுகாக்கவும், அதில் தொடர்புடைய தொழில்நுட்பம், உரிமம் மற்றும் அறிவியல் சார்ந்த பயிற்சிகளை வழங்கும் வகையில் மையத்தை நிறுவவேண்டும். அதன்மூலம் முறையான பயிற்சிகளை வழங்கி, தொழிலை மேம்படுத்த வேண்டும். வணிகம் மற்றும் சந்தை விரிவாக்கம் செய்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். இடைத்தரகர்களை தவிர்த்து, உறுப்பினர்கள் நேரடியாக கம்பெனிகள், மால்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் அவர்களது தயாரிப்புகளை விற்க வேண்டும். அரசு மற்றும் நிதி உதவிகள் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். உறுப்பினர்களின் உற்பத்தி மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும். உற்பத்தி முறைகளில் தொழில்நுட்ப மேம்பாடுகள், பசுமையான உற்பத்தி முறைகள், புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுட வேண்டும். அப்பளம், வடகம், மோர் வத்தல் போன்ற பொருட்களுக்கு தனித்தன்மை சான்றிதழ்களை பெறுதல் மற்றும் தரத்தன்மையை கடைப்பிடிப்பது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.