• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் கோரிக்கை

Byகாயத்ரி

Jan 11, 2022

அரசு பத்திரிகையாளர்கள் காப்பீடு திட்டத்தை வழங்கியதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டையும், நன்றியையும் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள மருத்துவ காப்பீடு திட்டம் அங்கிகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே என்று கூறியிருப்பது பத்திரிகை தொழிலில் உள்ள பலரது மனதை புண்படுத்தி உள்ளது.காரணம் கடைக்கோடி மக்களை சந்தித்து செய்தி அனுப்பும் தாலுகா செய்தியாளர்கள் முதல் மாவட்ட செய்தியாளர்கள் வரை அடிப்படை அடித்தட்டு மக்களை சந்தித்து செய்தி அனுப்புவார்கள்.

கெ. கதிர்வேல் – பொதுச்செயலாளர்- தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன்

அதுபோல் RNIல் பதிவு பெற்று தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டு வரும் பத்திரிகையாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பயன்படுகின்ற விதத்தில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீடு திட்டம் அரசு அங்கீகாரம் இல்லாத RNIல் பதிவு பெற்று வெளிவரும் நாளிதழ், பருவ இதழ்களில் பணிபுரியும் மாவட்ட – தாலுகா செய்தியாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், ஆசிரியர், உதவி ஆசிரியர், அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் பயன்படும் விதத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த காப்பீடு திட்டம் பத்திரிகை துறை சார்ந்த அனைவருக்கும் பயன் பெறும் வகையில் விரிவாக்கம் செய்து ஆணையிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆல் மீடியா ஜானலிஸ்ட் யூனியன் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.