• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆஸ்கர் வலைத்தளத்தில் தமிழ்ப்படம் ஜெய்பீம்

சர்வதேச சினிமாவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் ஆஸ்கர் விருது முதன்மை கெளரவமாக கருதப்படுகிறது ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே ஆஸ்கர் விருது வழங்கப்பட்டாலும் வெளிநாட்டுப் படங்களுக்கென சில சிறப்பு விருதுகளையும் வழங்கி கௌரவிக்கிறார்கள். அந்த விருதுகளுக்காகப் பல நாடுகளின் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.

ஆஸ்கார் இறுதிப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழ் சினிமா படைப்பாளிகள் முயற்சித்து வருகின்றன ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடைபெறவில்லை
ஆஸ்கர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பதிவிலும் தங்களது படங்கள் பற்றிய தகவல்கள் இடம் பெறுவதை உலகம் முழுவதும் உள்ள திரைப்படக் கலைஞர்கள் விரும்புகிறார்கள்.

ஆஸ்கர் அகாடமி, ‘ஆஸ்கர்ஸ்’ என்ற யுடியூப் சானல் ஒன்றை நடத்தி வருகிறது. அதில் ‘ஜெய் பீம்’ படம் பற்றிய 12 நிமிட வீடியோ ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் படத்தின் சில முக்கிய காட்சிகளும், இயக்குனர் த.செ.ஞானேவல் பேட்டியும் இடம் பெற்றுள்ளது. படத்தின் உருவாக்கம் பற்றி அந்தப் பேட்டியில் அவர் பேசியுள்ளார்.

அந்த வீடியோவின் கமெண்ட் பக்கத்தில் இது தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பெருமை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.