திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நத்தம் பகுதியில் கடந்த 6.9.2025 அன்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பரப்புரையில் ஈடுபட நத்தம் வருகை தந்த போது கணவாய்பட்டி அருகே புளி விவசாயிகள் தங்களது கோரிக்கை குறித்து அவரிடம் விளக்கிப் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னாள் முதல்வரை இழிவு படுத்தும் விதமாகவும், புளி விவசாயிகளை கொச்சைப் படுத்தும் விதமாகவும் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என வேதனை தெரிவித்தனர்.