• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோட்சைப் பற்றி பேசினால் பிரச்சனை! – இயக்குநரின் பேச்சு!

காந்தியைப் பற்றி நீங்கள் கூறலாம் ஆனால் கோட்சைப் பற்றிக் கூறினால் பிரச்சனை ஆகும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கூறியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்தண்டா, பீட்சா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் மகான். விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடித்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

இந்த படமே, காந்தியின் தத்துவத்தை சொல்லும் படமோ, அவரின் புனிதத்தை சொல்லும் படமோ இல்லை. காந்தி சொன்ன கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் பற்றிய படம் தான் மகான். காந்தியவாதியை இந்த படத்தில் தவறாக காட்டவில்லை, காந்தியின் கொள்கைகளை மூர்க்கத்தனமாக புரிந்து கொண்ட எக்ஸ்டீம் காந்தியவாதிகளின் கதாபாத்திரம் இப்படத்தில் உள்ளது என்றார்.

மகான் படத்தில் கோட்சேவை விமர்சிக்கும் வகையில் ஒரு வசனம் வரும், கோட்சேவைப் போன்ற கொள்கை வெறிப்பிடித்த ஒருவன் தான் காந்தியை சுட்டார் என்று ஆனால், அந்த வசனத்தை தணிக்கைக்குழு எடுக்க சொல்லிவிட்டனர். காந்தி இறந்துவிட்டார் என்று சொல்லலாம், ஆனால் காந்தியை கோட்சே சுட்டார் என்றால் பிரச்சனை வரும், நாட்டின் நிலை அப்படி இருக்கிறது என்றார்.