• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாவலில் என்ட்ரி கொடுக்கும் தல தோனி

Byகாயத்ரி

Feb 3, 2022

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் நாயகனாக தோன்றவுள்ளார்.

விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த கிராஃபிக் நாவலின் நாயகனான அதர்வா என்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு கிரிகெட் வீரரான எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரமேஷ் தமிழ்மணி என்பவர் கிராஃபிக் நாவல் ‘அதர்வா: தி ஒரிஜின்’-ஐ எழுதியுள்ளார். இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை தோனி தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘பாகுபலி’ போன்ற வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட இந்த கிராஃபிக் நாவலில் தோனியின் தோற்றம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.