• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கொரோனாவுக்கு மாத்திரை கண்டுப்பிடிப்பு….

Byகாயத்ரி

Nov 11, 2021

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி ஏற்கனவே இந்தியாவிலேயே கண்டுபிடித்த நிலையில் விரைவில் கொரோனாவுக்கு எதிராக மாத்திரைக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கும் எனத் தெரிகிறது.


மெர்க் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மோல்னுபிராவிர் எனும் ஆன்ட்டிவைரல் மாத்திரைக்கு விரைவில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று சிஎஸ்ஐர் அமைப்பின் கொரோனா கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் மருத்துவர் ராம் விஸ்வகர்மா தனியார் சேனல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.


லேசான மற்றும் மிதான கொரோனா தொற்றுக்கு மோல்னுபிராவிர் மாத்திரைகளை வழங்கலாம், கொரோனா தொற்று ஒருவருக்கு வீரியமடையக் கூடும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் எனக் கருதப்படுபவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் பாதிப்பிலிருந்து மீள முடியும்.

இது தவிர பைஸர் நிறுவனம், பேக்ஸ்லோவிட் ஆகிய இரு நிறுவனங்களும் கொரோனா வைரஸுக்கு எதிராக மாத்திரையை கண்டுபிடித்து மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். தனியார் சேனல் நிகழ்ச்சியில் சிஎஸ்ஐர் அமைப்பின் கொரோனா கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் மருத்துவர் ராம் விஸ்வகர்மா பேசுகையில் “கொரோனா பெருந்தொற்றின் முடிவில் இருக்கிறோம்.

இந்தசூழலில் தடுப்பூசிக்கு அடுத்தார்போல் மாத்திரைகள் வருவது நல்ல முன்னேற்றம்.இந்த மாத்திரைகள் புழக்கத்துக்கு வரும்போது, கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழியலாம். மால்னுபிராவிர் மாத்திரைகளை இந்தியாவில் தயாரிப்பது குறித்து மெர்க் நிறுவனம் இந்தியாவில் 5 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது. இந்த மாத்திரைக்கு எந்த நாளிலும் மத்திய அரசு சார்பில் அனுமதி வழங்கப்படலாம் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.