• Sat. Apr 27th, 2024

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்
ரிக்கி பாண்டிங் கணிப்பு

டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வரும் வேளையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கிப் பாண்டிங் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
பெரும்பாலான லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்ட போதும் ஒரு அணி கூட இதுவரை அரையிறுதி சுற்றுக்கு செல்வதை உறுதி செய்யவில்லை. இதே போல் ஒரு அணி கூட தோல்வியே பெறாத அணி என்ற பெருமையுடனும் இல்லை.
குரூப் ஏ-ஐ பொறுத்தவரையில் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும் தலா 5 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மற்றொரு புறம் குரூப் பி பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும், பாகிஸ்தான் 3வது இடத்திலும் உள்ளது.
இந்த தொடரில் அசுர பலத்தை வெளிப்படுத்தி வருவது தென்னாப்பிரிக்க அணி தான். எந்தவொரு அணியாலும் தோற்கடிக்கப்படாமல் இருந்த தென்னாப்பிரிக்கா, நேற்று பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது. எனினும் போராடி தோற்றது. அந்த அணி வேகப்பந்துவீச்சு, பேட்டிங் என கலக்கி வருவதால், இறுதிப்போட்டிக்குள் நுழைந்தால் நிச்சயம் வெற்றி என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அதற்கு ரிக்கிப் பாண்டிங் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தென்னாப்பிரிக்க அணி யாராலும் வீழ்த்த முடியாமல் உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதை வைத்து முடிவு செய்ய முடியாது. இறுதிப்போட்டியில் யார் மோதப்போகிறார்கள் என்பதை யாராலும் சரியாக கணிக்க முடியாது. ஆனால் இந்தியா ஸ்s ஆஸ்திரேலியா அணிகள் தான் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் என நான் நினைக்கிறேன்.
புள்ளிப்பட்டியலில் 3வதாக உள்ள ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற வேண்டுமென்றால் இன்று நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தானை வெற்றி பெற வேண்டும். அதுவும் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் ரன்ரேட்டில் அதிகம் உள்ள இங்கிலாந்தும் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும். இந்தப் பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது. அரையிறுதிக்கு முதல் அணியாக நியூசிலாந்து தகுதி பெற்றது. அடுத்த அணி யார் என்பதில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *