• Fri. Apr 26th, 2024

அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்
நம்பிக்கையை கைவிடாத முகமது ஷமி

உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குழுவில் முகமது ஷமிக்கு முதலில் இடம் கிடைக்கவில்லை. அவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது. உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாட இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விளையாடவில்லை. உலகக்கோப்பை நெருங்கியதால், முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில்தான் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் உலகக் கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகினார். பும்ராவுக்குப் பதிலாக தீபக் சாஹர் அல்லது அவேஷ் கான் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய பிசிசிஐ விரும்பியது. ஆனால் அவர்களின் பந்து வீச்சு சரியான முறையில் இல்லாத காரணத்தினால், முகமது ஷமியை பிசிசிஐ தேர்வு செய்தது. டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசும் முகமது ஷமியால் டி20-யில் சிறப்பாக பந்து வீச முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்களில் ஷமி சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். அந்த அனுபவத்தை வைத்து பிசிசிஐ அவரை ஆடும் லெவன் அணியில் சேர்த்தது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளிலும் முகமது ஷமி அபாரமாக பந்து வீசியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 4- ஓவரில் 25 ரன் கொடுத்து -1 விக்கெட் எனவும், நெதர்லாந்துக்கு எதிராக 4- ஓவரில் 27 ரன் கொடுத்து -1 விக்கெட் எனவும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4- ஓவரில் 13 ரன் கொடுத்து 1 விக்கெட் எனவும், 3 ஓவரில் 25 ரன் கொடுத்து -1 விக்கெட் எனவும் அசத்தியுள்ளார். டி20-யில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணியில் சேர்த்த உடனேயே சிறப்பாக பந்து வீசுவதற்கான காரணம் குறித்து அவர் விவரித்துள்ளார். இதுகுறிதது அவர் கூறியதாவது:- எல்லாமே முன்னேற்பாடை சார்ந்தது. எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என அணி நிர்வாகம் என்னிடம் சொல்லியுள்ளது. அணிக்கு தேவைப்படும்போது உங்களுக்கு அழைப்பு வரும். இதைத்தான் நாங்கள் எப்போதுமே சொல்வோம். நீங்கள் என்னுடைய வீடியோவை பார்த்தீர்கள் என்றால், நான் எப்போதுமே பயிற்சியை விட்டது கிடையாது, என்னுடைய பயிற்சி தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து மற்றொரு வடிவ கிரிக்கெட்டிற்கு மாறுவது, அதாவது ரெட் பால் கிரிக்கெட்டில் இருந்து ஒயிட் பால் கிரிக்கெட்டிற்கு மாறுவது எப்போதுமே எளிதானது அல்ல. நான் டி20 உலகக் கோப்பைக்குபின் தற்போது டி20-யில் விளையாடுகிறேன். ஒரு வீரரருக்கு என்ன நிறம் பந்து என்பதை விட, நம்பிக்கை தேவை என்பது ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு நிச்சயமாக பயிற்சி தேவை. புதுப் பந்து, பழைய பந்து ஆகியவற்றில் பந்து வீசுவது அனுபவத்தின் காரணமாகத்தான். போட்டியில் என்னைப் பார்த்தீர்கள் என்றால், நான் புதுப் பந்தில்தான் பந்து வீசுவேன். ஆனால், பயிற்சியின் போது, நான் வழக்கமாக பழைய பந்து அல்லது ஓரளவிற்கு தேய்ந்த புதுப்பந்து ஆகியவற்றைதான் பயன்படுத்துவேன். கடந்த வருடம் உலகக் கோப்பை தொடரின்போது, பாகிஸ்தானுக்கு எதிராக ஷமி அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய இப்திகாரை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *